Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29-12-2025) | 11AM Headlines | Thanthi TV

x
  • பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி வந்தடைந்தார்... விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்..
  • தமிழ்நாட்டில் நிச்சயமாக பாஜகவிற்கு இடமில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்... நயினார் நாகேந்திரன் கனவு காணட்டும் என்றும் விமர்சித்துள்ளார்...
  • கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜராகியுள்ளனர்... தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நத்தி வருகின்றனர்...
  • சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆயிரத்து 46 ஆசிரியர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்...
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, ஒன்றன் பின் ஒன்றாக மோதிய தனியார் பேருந்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது... இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன..

Next Story

மேலும் செய்திகள்