Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2025) | 11AM Headlines | Thanthi TV
- வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது...; தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு.... விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
- தொடர் மழையால் நெல்லை மாவட்டம் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு....சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை 10 வது நாளாக தொடர்கிறது...
- ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
- கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவு... திருவாலங்காடு, திருத்தணியில் 7 சென்டிமீட்டர், திருவள்ளூரில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது...
Next Story
