Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13-11-2025) | 11AM Headlines | Thanthi TV

x
  • 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தந்தி டிவிக்கு குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்... நேர்மையான செய்தி, ஆயுத எழுத்து, மக்கள் மன்றம், கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகள் வழியாக நாட்டின் பிம்பத்தை தொடர்ந்து பிரதிபலிப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்...
  • தாய் மொழிப்பற்று, மொழி உணர்வை ஊட்டும் தூண்டுகோலாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்... பல ஆண்டுகள் மக்கள் சேவை செய்து, ஊக்குவித்து, ஒன்றிணைக்கும் பணியை தந்தி டிவி தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்...
  • மக்கள் மன்றத்தில் ஆரோக்கியமான கருத்தாக்கத்தை உருவாக்குவதில் தந்தி டிவியின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்... ஊடகத்துறை மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டிருக்கும் தந்தி டிவியின் ஒட்டுமொத்த குழுவுக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார்...
  • தந்தி டிவி என்றால், அனைத்து தரப்பு மக்களுக்கும் இடமளிப்பது, நடுநிலையாக செய்திகளை வெளியிடுவது போன்ற அம்சங்களே தமிழக மக்கள் மனதில் தோன்றும்... பெருமதிப்பிற்குரிய சி. பா. ஆதித்தனார் காட்டிய ஊடக வழியில், தந்தி டிவியும் செய்திகளை வழங்கி வருவது சிறப்பானது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்...
  • சமூக நலத்துறை சார்பில் 90.41 கோடி மதிப்பில் 12 புதிய தோழி விடுதிகள், கூர்நோக்கு இல்ல கட்டடங்கள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்... சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்...

Next Story

மேலும் செய்திகள்