இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-09-2023) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கடந்த ஒரு மாதமாக, பாஜக தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தேர்தல் சமயத்தில் கூட்டணியை அறிவிப்போம் என்றும் ஒ.பி.எஸ். தகவல்... 3வது முறையாக ஆளும் தகுதி பா.ஜ.க.வுக்கு உள்ளது என்றும் பேட்டி...
  • தலைவர்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது..."நம்பகத்தன்மை உள்ளவர் ஓ.பி.எஸ். தான் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி...
  • மும்பை சென்சார் போர்டு ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார்...பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களை வெளியிட்டார்..
  • நடிகர் சித்தார்த் நடித்த "சித்தா" பட நிகழ்வில் கன்னட அமைப்பினர் போராட்டம்...தமிழ் நடிகர் எனக்கூறி வெளியேறக் கூறியதால் பரபரப்பு..
  • கர்நாடகாவில் முழு அடைப்பு - பெங்களூருவில் 144 தடை உத்தரவுதமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு... பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு...

Next Story

மேலும் செய்திகள்