காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (31.07.2025) | 11 AM Headlines | ThanthiTV
- சென்னை சென்னீர்குப்பத்தில் தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி இருவர் உயிரிழப்பு...
- கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார்...
- ஐடி ஊழியர் கவின் கொலைவழக்கில் கைதான சுர்ஜித், அவரது தந்தை மற்றும் சகோதரியின் செல்போன்கள் ஆய்வு...
- நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க மறுப்பு கொலையாளி சுர்ஜித்தின் தாயை கைது செய்ய வேண்டும் என கவினின் தந்தை வலியுறுத்தல்...
- நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குடும்பத்துக்கு தி.மு.க எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் நேரில் ஆறுதல்...
- நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்...இனி, இது போன்று ஒரு சம்பவம் நடக்க கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்....
- பாமகவில் ஒரே தலைவர் தான்...ஒரே தலைமை தான்... என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு...யார் நடைபயணம் போனாலும் எந்த பயனும் இல்லை எனக் கருத்து...
- தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு விடுதி, உணவு, போக்குவரத்து, இதர வகை கட்டணம் என 4 பிரிவுகளின் கீழ் புதிய கட்டணம் அறிவிப்பு...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது...ஒரு சவரன் தங்கம் 73 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை
- ஈரானிய பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல்களை வர்த்தகம் செய்ததாக இந்திய நிறுவனங்கள் மீது தடை விதிப்பு....தடைகளை மீறி வர்த்தகம் செய்ததால் அமெரிக்கா நடவடிக்கை
- பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்...பாகிஸ்தானுடன் மிகப்பெரிய அளவிலான எண்ணெய் ஒப்பந்தம் போட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு...
- இந்தியா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்ட விவகாரம்...இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு...
Next Story
