ஆதாரை புதுப்பிக்க செப். 14 வரை அவகாசம்

புதுச்சேரியில் அரசு திட்டங்களையும், சேவைகளையும், எளிதில் பெற ஆதார் கார்டுகளை வரும் செப்டம்பர் 14ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆதாரில் உள்ள அடையாள சான்று மற்றும் முகவரி சான்று போன்ற ஆவணங்களைக் கொண்டே புதுச்சேரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து " திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை" வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் தங்களின் ஆதார் தகவல்களை எப்போதும் புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமாகின்றது எனவும், அதற்காக "மை ஆதார்" என்ற இணைய பக்கத்தின் மூலம் புதுப்பித்துக் கொள்ள கால வரம்பை வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com