Vandalur Rainfall | கடும் கோடையில் வண்டலூர் பூங்காவில் `செயற்கை மழை’.. அதிசயித்த மக்கள்
கோடை வெயிலை சமாளிக்க வண்டலூர் பூங்காவில், விலங்குகளுக்கு பூங்கா நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக பறவைகள் வசிக்கும் இடத்தில் கூண்டுகளின் மீது சாக்குபைகளை போர்த்தி, அவற்றிற்கு அடிக்கடி தண்ணீர் தெளித்து குளிர்ச்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல செயற்கை நீரூற்றில், யானைகள் குதுகலமாக குளியலிட ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை வரவேற்க சாரல் மழை போல ஷவர் தயார் செய்யப்பட்டுள்ளது. அதோடு, குரங்குகளுக்கு அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களான தர்பூசணி, சாத்துக்குடி பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Next Story
