Congress | `TO டெல்லி' - கோவையில் தபால்களோடு குவிந்த காங்., கட்சியினர்
மத்திய அமைச்சர் பதவி விலக கோரி காங்., கட்சி தபால் அனுப்பும் போராட்டம் கோவையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசுத் தலைவருக்கு 5 ஆயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நீட் தேர்வு முறைகேடு மற்றும் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய போராட்டக்காரர்கள், பின்னர் தபால் நிலையத்திற்குள் சென்று தங்களது கோரிக்கைகள் அடங்கிய தபால்களை அனுப்பினர். தொடர்ந்து பேசிய மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வினாத்தாள் முறைகேடு காரணமாக பல லட்சம் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
