வெயிலுக்கு குட்டி பிரேக்..."வரப்போகும் மழை.." - வானிலை மையம் தகவல்

x

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஈரோட்டில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், கொடைக்கானலில் 18.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்