``39 கோயில் சிலைகள்... `ரூ.280 கோடி மதிப்பு' - அந்த பெண் யார்..?'' - பொன் மாணிக்கவேல் பரபரப்பு தகவல்

x

தென்காசி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதர் கோயிலில் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாப்பான்குளத்தில் உள்ள திருவெண்காடர் கோவிலில் உள்ள 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலையை, நியூயார்க்கில் வசித்த்து வரும் சுபாஷ் சந்திர கபூரின் சகோதரி சுஷ்மா ஷெரீன் வைத்திருப்பதாக கூறினார். அவரிடம், மொத்தம் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள 39 சாமி சிலைகள் இருப்பதாகவும், உரிய ஆதாரங்கள் கொடுத்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்