குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம் - பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு புகார் உறுதியானதை தொடர்ந்து ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் மாலாதேவி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம் - பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
Published on

ராமநாதபுரம் பட்டினம்காத்தானை சேர்ந்த மாலாதேவி, குரூப் 2ஏ தேர்வில் மாநில அளவில் 37வது தரவரிசை பெற்று ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக பிப்ரவரி மாதம் முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com