

டிஎன்பிசி குரூப் 2ஏ முறைகேட்டில் மூவர் கைதானதாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பணியாற்றி வந்த அரசு அலுவலகங்கள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத்துறை அலுவலகத்தில் ஞானசம்பந்தம், செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆனந்தன், எழிலகத்தில் மகாலட்சுமி ஆகிய நால்வரும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.