குரூப் 2, 2-ஏ தேர்வுகள் - அறிவிக்கை வெளியீடு | TNPSC

குரூப் 2, 2-ஏ தேர்வுகள் - அறிவிக்கை வெளியீடு

மே மாதம் 21ஆம் தேதி போட்டி தேர்வு

அதிகாரிகள் நிலையிலான குரூப்-2 மற்றும் உதவியாளர் நிலையிலான குரூப் 2a பணிகளுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு இன்று வெளியானது. இதற்கான தேர்வுகள் வரக்கூடிய மே மாதம் 21 ம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 2 நிலையில் 116 பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ நிலையில் 5 ஆயிரத்து 413 பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியானது.

மேலும் இந்தத் தேர்வுகளுக்கு இன்று 23 ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை இணையதளம் வழியாக தேர்வுகள் விண்ணப்பிக்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com