டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக ஜெயகுமாரின், நண்பரான அசோக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக்குமார், ஜெயகுமாருடன் கூட்டு சேர்ந்து தேர்வுகளில் முறைகேடு செய்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை, 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.