நேராக போலீஸ் மீது மோதிய ஆட்டோ... சிக்கிய டிரைவர்.. பரபரத்த சென்னை

x

கோயம்பேட்டில், மது போதையில் போக்குவரத்து காவலரை இடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் கைது செயப்பட்டார். சென்னை கோயம்பேடு சாலை சந்திப்பில் போக்குவரத்து தலைமை காவலரார் ராபர்ட் அந்தோணி செபஸ்டின் என்பவர், நேற்று இரவு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த அன்பு என்பவர் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவை மறித்தும், நிற்காமல் காவலர் மீது மோதிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து காவலர் அளித்த புகாரின்பேரில், குடிபோதையில் ஆட்டோவை இயக்கிய அன்புவை கைது செய்த போலீசார் அவரது ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்