தாய் மீது தாக்குதல்; தடுத்த மகன் அடித்து கொலை? - கதறும் தாய் | TN Police

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் உயிரிழந்த நிலையில் இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. மகன் சேகர் உட்பட குடும்பத்துடன் மல்லிகா வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மல்லிகாவுக்குப் பக்கத்து வீடான பிரகாஷ் குடும்பத்துடன் தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

மல்லிகாவைப் பக்கத்து வீட்டினர் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் அதனைத் தடுக்க வந்த சேகரை பிரகாஷ் குடும்பத்தினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பிரகாஷ் உட்பட இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com