மிரட்டி விட்ட தமிழக போலீஸ்... குவிந்த பதக்கங்கள்... சென்னையில் பாராட்டு விழா
குதிரையேற்ற போட்டியில் பதக்கம் வென்ற தமிழக காவல்துறை
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய அளவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 10ம் தேதி முதல் 25ம் தேதிவரை இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படை அடிப்படை பயிற்சி மையத்தில் 43 வது அகில இந்திய காவலர் குதிரையேற்ற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை அணியின் உதவி காவல் கண்காணிப்பாளர் ஷுபம் நாகர்கோஜ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். உதவி ஆணையர் அஜய் தங்கம் வெண்கல பதக்கமும், முதல் நிலை காவலர் சுகன்யா என்பவர் தங்கபதக்கமும் வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த நிலையில் பதக்கம் வென்றவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
Next Story
