1கிலோ கேன்சர்; நுரையீரலில் 4 செமீ கட்டி-உயிருக்கு போராடிய பிஞ்சுகள்-அரசு மருத்துவர்கள் செய்த மேஜிக்

1கிலோ கேன்சர்; நுரையீரலில் 4 செமீ கட்டி-உயிருக்கு போராடிய பிஞ்சுகள்-அரசு மருத்துவர்கள் செய்த மேஜிக்
Published on
• அரியவகை மரபணு பாதிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உயர்ரக தனியார் மருத்துவமனைகளே கைவிட்ட சூழலில், உரிய சிகிச்சையளித்து அசத்தியுள்ளனர் அரசு மருத்துவர்கள். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்... • பிஞ்சு உயிர்களை காக்கும் மகத்தான சேவையாற்றி வரும் சென்னை எழும்பூர் மருத்துவமனையில், மீண்டும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரை காத்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.. • ஆம், நிவாஸ் என்ற ஒரு வயது குழந்தைக்கு, இதயத்திலிருந்து வரும் ரத்தநாளமான மகாதமனி அருகே நுரையீரலை அழுத்திக் கொண்டிருந்த 4 சென்டி மீட்டர் கட்டியை நுண் துளை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி, குழந்தையின் உயிரை காத்துள்ளனர் மருத்துவர்கள்... • இதே போல் வேளச்சேரியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து குழந்தையை மீட்டுக் கொடுத்துள்ளனர்.. • இதே போல, ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வந்த வெங்கடமது என்ற 5 வயது சிறுவனுக்கு வயிற்றில் 15 சென்டி மீட்டர் கட்டி கண்டறியப்பட்டது. • ஆந்திராவில் அரசு மருத்துவமனையின் பரிந்துரையின்படி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்த சிறுவனுக்கு, இந்த ஒரு கிலோ எடைகொண்ட புற்றுநோய் கட்டியை முழுவதும் நீக்கி, வயிற்று சுவர் மறு சீரமைப்பு செய்த பின் முழுமையான குணமடைந்த சிறுவன் வெங்கடமது வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதமாக தெரிவித்தனர். • இப்படி ஆண்டுக்கு பல சிகிச்சைகள் செய்து பல உயிர்களை காத்து வருவதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்... • லட்சங்களில் பணத்தை செலவழிக்க முடியாத சூழலில் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனை தான் ஆதாரம் என்றிருக்கும் போது நம்பி வந்தவர்களின் உயிரை காத்து அவர்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள் நம் அரசு மருத்துவர்கள்..
X

Thanthi TV
www.thanthitv.com