``இனி தனியார் ஹாஸ்பிடலிலும் தடுப்பூசி இலவசம்..'' தமிழக அரசு அதிரடி

குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை, குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்திக் கொள்ளும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து செலுத்தப்படும் தடுப்பூசிகள், அரசு மருத்துவ மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிறந்த குழந்தைக்கு முதல் மாதத்தில் இருந்து 18 வயது வரை, 16 தவணைகளில் செலுத்தப்படும் தடுப்பூசிகளை,

குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தி கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்றை

தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இத்திட்டம் விரைவில் தொடங்கி வைக்கக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com