தமிழகத்தில் 9 கலெக்டர்கள் அதிரடி மாற்றம் | TN Govt

x

தமிழகத்தில் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, விழுப்புரம் ஆட்சியராக இருந்த பழனி இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும், கிருஷ்ணகிரி ஆட்சியராக இருந்த சரயு, பொதுத்துறை இணை செயலராகவும், திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பிரபுசங்கர், சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநராகவும்,திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை பணிகள் திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதே போல் தமிழகம் முழுவதும் 36 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்