அரசு பஸ்ஸில் இருந்து வந்த புகை... அலறி அடித்து ஓடிய மக்கள் - கோவையில் பரபரப்பு | TN Bus | Kovai
கோவை அருகே அரசு பேருந்தில் திடீரென புகை வந்த சம்பவம் பயணிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் இருந்து சென்ற பேருந்து, கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் டீசல் நிரப்ப நிறுத்தப்பட்டது. டீசல் நிரப்பியதும் பேருந்தை இயக்கியபோது திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓடினர். மாற்று பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பேருந்தில் ஸ்டார்டிங் மோட்டார் பழுதாகி இருந்ததால் புகை வந்ததாக பணிமனை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
