தமிழக வரலாற்றில் தயாரிக்கப்பட்ட `முதல் பொருளாதார ஆய்வறிக்கை’திகைக்க வைக்கும் பல தகவல்கள்
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்முறையாக தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைப்படி 2024 –2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023 – 2024ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27.22 லட்சம் கோடியாக உள்ளதாகவும், இதன்படி பொருளாதார வளர்ச்சி 8.23 சதவீதமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 31.8 சதவீதம் உள்ள வடக்கு மண்டலம், GSDPயில் 36.6 சதவீதம் என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3.15 லட்சமாக உள்ளதாகவும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.