பால் குளிரூட்டும் நிலையம் - நந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
அணைக்கட்டு தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து தர வேண்டுமென, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.
கிராம பகுதிகள் நிறைந்த அணைக்கட்டு தொகுதியில், 40 முதல் 50 கிலோ மீட்டர் தொலைவில் பால் குளிர்விக்கும் மையம் இருப்பதால், பால் கெட்டுப் போவதாகவும், எனவே அணைக்கட்டு, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் பால் குளிரூட்டும் மையம் அமைத்து தர வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.
Next Story
