நாளை முதல் போராட்டம் அறிவிப்பு | protest

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் கருப்பு சட்டை அணிந்துசெல்லும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கட்கிழமை முதல் 22 ஆம் தேதி வரை கருப்பு ஆடைகள் மற்றும் கருப்பு பேஜ் அணிந்து வேலைக்கு செல்லும் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com