தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 46 வது தலைமைச் செயலாளரான அவரின் பதவிக்காலம் அடுத்த மாத இறுதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.