

தற்போது, பிரதான இடங்கள் மற்றும் வாசல்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தலைமை செயலகத்துக்குள் பொதுமக்கள் நடமாடும் அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கடைகள், உணவகங்கள் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி, அங்கு நடமாடும் மக்களை கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.