TN Rains | தமிழகத்தின் பல பகுதிகளில் துவம்சம் செய்த இடி, மின்னல், சூறைகாற்று

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெய்த மழையால் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு வீடுகள் மீதும், மின்கம்பங்கள் மீதும் சாய்ந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, அனக்காவூர், வடதண்டலம், செங்காடு, வெண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிறிஸ்தவ தேவாலயம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வேன்கள் மீது வேப்பமரம் வேரோடு சாய்ந்தது

சென்னையை அடுத்த புழல், காவாங்கரை, கதிர்வேடு, செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், காக்காவேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றும், இடியுடன் கனமழைபெய்ததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளம் நிரம்பியது.


Next Story

மேலும் செய்திகள்