TN Rains | தமிழகத்திற்கு ரெட் அலர்ட் | இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் வலுவடைய உள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் , 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
