TN Rain Update | Red Alert | நெருங்க நெருங்க வலுவடையும்புயல் சின்னம் - புது அலர்ட்.. உஷார் மக்களே

x

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைய உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் , 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்