TN Rain | விடாமல் வெளுத்தெடுத்த கனமழை - மழையில் நனைந்தபடி காத்திருந்த பயணிகள்

திருச்சி மாவட்டம் துறையூரில் கனமழையால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக புறவழிச் சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழைய பேருந்து நிலையம் அருகே காத்திருந்த பயணிகள், திடீரென பெய்த கனமழையில் நனைந்தனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் போதிய நிழற்குடை வசதி இல்லாமல் சிரமப்பட்டனர். மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com