அமெரிக்காவில் தங்கம் வென்று நாட்டை திரும்பி பார்க்க வைத்த `TN போலீஸ்'

x

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல்துறை, தீயணைப்பு துறைக்கான தடகள போட்டியில் ஓமலூர் தலைமை காவலர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்ட காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ்,

காவல்துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 30 நாடுகள் கலந்து கொண்ட உலக காவல்துறை மற்றும் தீயிணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டியில் கோலூன்றி உயரம் தாண்டுதல் பிரிவில்

இந்தியா சார்பில் தங்கம் வென்று தலைமை காவல் தேவராஜ் சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்