TN Police | ``காவல்துறையின் அஜாக்கிரதை தான் காரணம்’’ - ஐகோர்ட் காட்டம்
தொடரும் ஆட்கொணர்வு மனு - போலீஸை சாடிய ஐகோர்ட்
தங்களின் சொந்த விருப்பத்தினால் மாயமானவர்களை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் அசாதாரண அதிகார வரம்பைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அறிவித்துள்ளது.
நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது அல்ல என உத்தரவிடக்கூடிய வழக்குகள் கூட, போலீசாரின் அஜாக்கிரதையால் தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் தனது மாயமான கணவரை மீட்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
