TN Police | Chennai | சென்னையில் சிறுமி கடத்தல்.. இமீடியட் ஆக்‌ஷனில் இறங்கி மீட்ட TN போலீஸ்

சென்னை காரப்பாக்கத்தில், 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமியை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார். சிறுமியின் தாத்தா அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சிறுமி திருப்பத்தூர் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டறிந்தனர். உடனடியாகச் செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர், வழியிலேயே அந்த நபரை மடக்கிப் பிடித்துச் சிறுமியை மீட்டனர். விசாரணையில், திருப்பத்தூரைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவரே சிறுமியைக் கடத்தியது தெரியவந்தது. குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவரே இந்தச் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான நபரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com