TN Police | பண்டல் பண்டலாக.. டன் கணக்கில் Dr*gs.. பஸ்பமாக்கிய TN போலீஸ்..

TN Police | பண்டல் பண்டலாக.. டன் கணக்கில் Dr*gs.. பஸ்பமாக்கிய TN போலீஸ்..

TN Police | பண்டல் பண்டலாக.. டன் கணக்கில் Dr*gs.. பஸ்பமாக்கிய TN போலீஸ்..

செங்கல்பட்டு அருகே போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் மையத்தில், 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு' திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது. சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6.6 டன் கஞ்சா, 11,700 மாத்திரைகள் மற்றும் மெத்தபெட்டமைன், கொக்கைன், பிரவுன் சுகர் உள்ளிட்ட 125 கிலோ உயர்ரக போதைப் பொருட்கள் இதில் அடங்கும். காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்தப் போதைப் பொருட்கள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com