

பெரும் பரபரப்பிற்கிடையே தமிழகத்தில் உள்ள 283 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மற்ற சில இடங்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இதில் 150 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுகவும்,133 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.
* கரூர் மாவட்டத்தில் அதிமுக , 8 ஒன்றியங்களையும் கைப்பற்றியது
* திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியுள்ளது.
* பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.