நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- நகராட்சி, மாநகராட்சி வாக்குப்பதிவு நிலவரம் | TNLocalBodyElection

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகபட்சமாக நகராட்சியில் 81.37 சதவீதமும், பேரூராட்சியில் 86.43 சதவீதமும், மாநகராட்சியில் 75.84 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.

நகராட்சியில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில், 81.37 சதவீதமும், குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 59.98 சதவீதமும் வாக்கு பதிவாகியுள்ளது.

பேரூராட்சியில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86.43 சதவீதமும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 66.29 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநகராட்சியில் அதிகபட்சமாக கரூரில் 75.84 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னை 43.59 சதவீதமும் பதிவாகியுள்ளது.

மூன்றையும் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், பேரூராட்சியில் அதிகபட்சமாக 74.68 சதவீதமும், குறைந்தபட்சமாக மாநகராட்சியில் 52.22 சதவீதமும் நகராட்சியில் 68.22% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com