TN Govt | SIR | தமிழகம் முழுவதும் இன்றே கடைசி நாள்
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், அதில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து, வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஜனவரி 18-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், தற்போது வரை 12,80,668 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.
நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என்று சுமார் 66 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதில் 53 லட்சத்து 65 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17ஆம் தேதி வெளியாகிறது.
