சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். உள் மற்றும் புறநோயாளிகளின் தேவை மற்றும் அவசர முக்கியத்துவம் கருதி தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.