61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
Published on

தமிழகம் முழுவதும் 16 மாவட்ட வருவாய் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த கருணாகரன், தமிழ்நாடு தகவல் ஆணைய செயலராக நியமக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட புதிய வருவாய் அதிகாரியாக காளிதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த செல்வராஜ், மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட புதிய வருவாய் அதிகாரியாக நிர்மலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் 61 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளராக இருந்த பொன்னி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த அரவிந்தன், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் எஸ்.பி. சரவணன் சிஐடி சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு புதிய எஸ்.பியாக ஸ்ரீ அபினவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக கண்ணனும், தூத்துக்குடி எஸ்.பியாக அருண் பாலகோபாலனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com