மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை விரைவு ரயிலை மறித்து நின்ற அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதை அடுத்து வைகை ரயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை நகரின் சில பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.