மகளிருக்கு மாதம் ரூ.1000 - தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்​இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றதாகவும், இரண்டாம் கட்ட முகாம்கள், ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை, சரிபார்க்க களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com