TN Govt | பறக்கும் ரயில் திட்டம் - தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு

x

TN Govt | பறக்கும் ரயில் திட்டம் - தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு

பறக்கும் ரயில் திட்டத்தை 100% கையகப்படுத்த தமிழக அரசு முடிவு, சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரையிலான 25 கிலோமீட்டர் தூர பறக்கும் ரயில் சேவையை முழுமையாக கையகப்படுத்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. சென்னை மெட்ரோ கழகத்தில் மாநில அரசுக்கு 67 சதவீத பங்கு உள்ள நிலையில், 600 கோடி முதல் 700 கோடி ரூபாய் வரை செலவிட்டு, பறக்கும் ரயில் வழித்தடத்தை நூறு சதவீதமும் கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜனவரியில் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வழித்தடத்தை நவீனமயமாக்கும் நோக்கில், உலக வங்கியிடம் 4 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை தமிழக அரசு கோரியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்