TN Govt | ``தமிழக அரசின் முடிவால் ஏமாற்றம்’’ - குமுறலை வெளிப்படுத்திய சங்கம்
TN Govt | ``தமிழக அரசின் முடிவால் ஏமாற்றம்’’ - குமுறலை வெளிப்படுத்திய சங்கம்
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே தமிழக அரசு உயர்த்தியிருப்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், 10 ரூபாய் ஊக்கத்தொகையுடன் மொத்தம் 20 ரூபாய் உயர்த்த வேண்டும் என கோரிய நிலையில், ஒரு ரூபாய் விலை உயர்வும், 2 ரூபாய் ஊக்கத்தொகையும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கால்நடை தீவனங்களின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
