TN Govt | Coldrif | மொத்தமாக ரத்து செய்து அதிரடி - தமிழக அரசு எடுத்த முடிவு

x

ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி

ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து காரணமாக, 22 குழந்தைகள் உயிரிழந்ததன் எதிரொலியாக..

தமிழ்நாடு சுகாதாரத்துறை 'ஸ்ரீசன்' என்ற மருந்து நிறுவனத்தின் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உற்பத்தி உரிமையை ரத்து செய்து, அந்நிறுவனத்தையும் மூட நடவடிக்கை எடுத்தது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்