லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தொடக்கம் : அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தொடங்கியதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தொடக்கம் : அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழக அரசு
Published on
தமிழகத்தில் லோக் ஆயுக்தா என்ற விசாரணை அமைப்பைக் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா, கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. லோக் ஆயுக்தா செயலாளர், இயக்குனர், சார்பு செயலாளர், பதிவாளர், சார் பதிவாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 26 பணியிடங்களை உறுதி செய்து அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் இந்த 26 பணியிடங்களுக்கான தகுதிவாய்ந்த நபர்களையும் தேர்வு செய்வார் என தெரியவந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com