TN Govt | தமிழகத்தில் 290 தொழிற்சாலைகள் அதிரடியாக மூடல் - பின்னணி என்ன?

x

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு - இதுவரை 290 தொழிற்சாலைகள் மூடல்

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்ததாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 290-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தி வருகிறது.கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மாநிலம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டன.9 ஆயிரத்து 248 கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 15 புள்ளி 56 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து சுமார் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.2019 முதல் இதுவரை 290-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொழிற்சாலைகள் மூடப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்