

ராமநாதபுரம் சேர்ந்த மல்லிகா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2005ஆம் ஆண்டு தமது கணவர் மீன் பிடிக்க சென்ற போது கடலில் விழுந்து காணாமல் போய்விட்டதாகவும், கணவரின் உடல் மீட்கப்படாததால், அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இறப்பு சான்றிதழ் இல்லாமல் இழப்பீடும் பெற முடியாது என்பதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் மல்லிகா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கடந்த 13 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் தொடர்பாக எவ்வளவு மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்