TN Election | ``தமிழகத்தில் உயர்ந்துள்ளது’’ - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 6,648 புதிய வாக்குச்சாவடிகள் - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 467-ல் இருந்து 75 ஆயிரத்து 35 ஆக உயர்ந்து இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் புதிய சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பிற்கு பிறகு 6 ஆயிரத்து 648 புதிய சாவடிகள் உருவாக்கப்பட்டதுடன்... 80 சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 ஆயிரத்து 509 சாவடிகள் இடம் மாற்றப்பட்டன. பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டதால் 7 ஆயிரத்து 752 மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன் விளைவாக, வாக்குச்சாவடிகளில் 6,568 நிகர உயர்வு ஏற்பட்டு உள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, வாக்குச்சாவடிகள் 2 கிலோமீட்டர் சுற்றளவில் அமைவதால் எந்தவொரு வாக்காளரும், வாக்களிக்க 2 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
