TN Election 2026| தேர்தல் நேரத்தில் அதிகார மட்டத்தில் வெடித்த பெரும் சர்ச்சை

தேர்தல் நேரத்தில் அதிகார மட்டத்தில் வெடித்த பெரும் சர்ச்சை

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனத்தில் சர்ச்சை தமிழக தேர்தல் நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமனத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமித்து உத்தரவிட்டார். ஆனால், தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி உள்துறை அமைச்சகம் ஐஜி துரை குமாரை அதே பதவிக்கு நியமித்தது. ஒரே நேரத்தில் இருவேறு உயர் அதிகாரிகள் முரணான உத்தரவுகளைப் பிறப்பித்ததும், உரிய கையெழுத்தின்றி அவசரமாக ஆவணங்கள் வெளியானதும் காவல்துறை மற்றும் அரசு வட்டாரத்தில் பெரும் நிர்வாகக் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com