TN Election 2026 | 21 பெட்டிகளில் கிலோ கிலோவாக தங்கம் - பறக்கும் படை கையில் ரூ.6 கோடி நகைகள்
TN Election 2026 | 21 பெட்டிகளில் கிலோ கிலோவாக தங்கம் - பறக்கும் படை கையில் ரூ.6 கோடி நகைகள்
ஓசூரில் ரூ.6 கோடியிலான தங்க நகைகள் பறிமுதலா? ஓசூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுடன் வந்த வாகனம் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து ஓசூரில் உள்ள தனியார் நகை நிறுவனத்திற்குச் சென்ற பார்சல் வாகனத்தை, பாகலூர் பகுதியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக சாலையிலேயே ஆவணங்களைச் சரிபார்க்க முடியாததால், வாகனம் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அக்ரிதி சேத்தி முன்னிலையில் 21 பெட்டிகளில் இருந்த 3 கிலோ 900 கிராம் தங்க நகைகள் மற்றும் அவற்றிற்கான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. நீண்ட நேரச் சோதனைக்குப் பிறகு, ஆவணங்கள் சரியாக இருந்ததை உறுதி செய்த அதிகாரிகள், வாகனத்தை விடுவித்தனர்.
